Saturday, March 13, 2004

 

செவ்வாய் - ஓர் மீள்பார்வை

செம்மண் நிறைந்த நம் அண்டை உலகம்செவ்வாய் கிரகம். வெறும் கண்ணுக்கு தெரிவாகத் தெரியும் இந்த கோளினை நம் முன்னோர்கள் "படிமகன்" என்றும் "அங்காரகன்" அழைத்தனர்.
இன்று வளர்ந்து வரும் நாடுகளில் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராட்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 4.10.1957 ஆம் ஆண்டு முதலாவது விண்கலமான "ஸ்புட்னிக்" ஏவிய நூற்றாண்டு விழாவை செவ்வாயில் கொண்டாட வேணும் என்பது விஞ்ஞானிகளின் அதங்கம்.

    

"செவ்வாய் குடியிருப்பு 2057 "(Mars Habitation 2057) என்ற திட்டத்தினை யோஜி இஷிகாவா, தாகயா ஒக்கிதா, யோஜி அமேமியா ஆகிய ஜப்பானிய நிபுணர்கள் செவ்வாயில் குடியேறவும், செவ்வாய் கோளினை மனித வாழ்வுக்கு உகந்ததாக திருத்தியமைக்கவும் திட்டங்கள் வகுத்துள்ளனர்.
3.7.1998 அன்று ஜப்பான் தனது "பிளானட்-பி" (Planet-B) என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி செலுத்தியது. இப்படி எல்லா நாடுகளும் செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏன் படையெடுக்கின்றன. அப்படி என்ன செவ்வாய் கிரகத்தில் இருக்கின்றது என்று பார்ப்போம்.
சூரியக் குடும்பத்தில் இன்று பூமிக்கு அடுத்தபடியாக செவ்வாய் தான் மனிதனை வரவேற்க செம்பட்டு விரித்து காத்திருக்கின்றது.
* இதன் புறப்பாப்பு பூமியின் நாலில் ஒரு பாகம்
* நிறை ஈர்ப்பு விசை மூன்றில் ஒரு பங்கு
* அண்டவெளி அபாயகதிர்களில் இருந்து பாதுகாக்கும் வளி மண்டலம்
* பூமியொடு ஒப்பிட்டால் 170 இல் ஒரு பங்கு காற்றழுத்தம் சுமார் 20-60 கி.மீ உயரங்களில் நீராவியும் கலந்துள்ளது.
* 95.5% கரியமில வாயு
* 2.3% நைட்டிரஜன்
* 1.5% ஆர்கன்

செவ்வாயில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 4480 கி.மீ குறுக்களவும், 630 கி.மீ ஆழமும் கொண்ட "கடற்பள்ளம்" (Vallis Mariners) ஒன்றுள்ளது. அங்கே கல்சியம் செறிந்த சுண்ணாம்புக் கற்கள் அதிகம்.

தங்கச் சமவெளியில் இரும்பு, சிலிக்கன், கல்சியம், பாஸ்பரஸ், அலுமினியம் போன்ற பல தாதுக்களும் கண்ட பிடிக்கப்பட்டுள்ளன.

வட துருவங்களில் பனிப்படலம் உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு வராது.

7.11.1996 அன்று கிளம்பிய "செவ்வாய் உலகளப்பு" (Mars Global Surveyor) என்னும் அமெரிக்க விண்கல ஆய்வின்படி செவ்வாய்க்கு பூமியை காட்டிலும் 800 இல் ஒரு பங்கே காந்தப்புலம் என அறிவித்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இங்கே "சைடோனியா" (Cydonia) என்னும் பிரதேசத்தில் "வைக்கிங்" விண்கலம் கண்டறிவித்த "செவ்வாயின் மனித முகம்" 1998 இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை கி.மீ குறுக்களவு கொண்ட பிரமாண்டமான பாறைத்தோற்றமே அது.

4.12.1996 இல் கிளம்பிய "பாத் பைண்டர்" (Pathfindder) எனும் விண்கலம் 1997 இல் செவ்வாயில் "ஏரிஸ் பள்ளம்" (Ares Valliis) என்னும் செவ்வாய் குழிவில் இறங்கியது. பின் அது தான் சுமந்து சென்ற "சோஜோனர்" (Sojouner) எனும் ஆறுசக்கர வண்டி மூலம் செவ்வாய் மண்ணை ஆராய்ந்தது. அந்த சோதனையின் போது பூமியின் கடற்படுகை மற்றும் சந்திரத் தரைகளில் உள்ளது போன்ற "பசால்ட்" ரகப் பாறைகள் செவ்வாயில் மிகுதி என்றும் தென்னமெரிக்க மேலைக் கடலோரம் "அண்டிஸ்" பிரதேசத்தில் உறைந்த எரிமலைக்குழம்பு போன்று 60% சிலிக்கா அடங்கிய கற்கள் உள்ளன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதைவிட அண்டார்டிகா பகுதியில் Roberta Score என்ற பெண்மணி கண்டெடுத்த ALH 84001 எனும் கல் துணுக்கு ஒரு குறுங்கோள் அல்லது விண்மீன் மோதலால் செவ்வாய் புறணியிலிருந்த பிய்தெறியப்பட்டு பூமியில் வந்து விழுந்த பாறை அம்சம் என்றும் அதில் PAH என்கின்ற உயிரியல் மூலக்கூறு அடங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்லில் பதிந்துள்ள கணுப்புழுக் கோர்வைக் கட்டமைப்புக்கள் செவ்வாயில் முதல் நுண்ணுயிரித் தோற்றம் கொண்டுள்ளதற்கான முலாதாரங்கள் என ஜான்சன் விண்வெளி மைய விஞ்ஞானி Dr. David Mc Kay ஆய்வுக்குழு அறிவித்தது.

நமது பூமிக்கு ஒரு நாள் என்பது 24 மணித்தியாலங்கள் அல்லவா அதே போல செவ்வாய்க்கு 24.6 மணித்தியாலங்கள். செவ்வாய் வானில் இரண்டு சந்திரன்கள் எதிரெதிர் திசையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு 3 முறை இவை மேற்கே உதித்து கிழக்கே மறையும். "போபோஸ்" (Phobos) என்ற சந்திரனுக்கு " அச்சம்" என்று பெயர் சூட்டியுள்ளனர். "டைமோஸ்" (Deimos) என்ற சந்திரனுக்கு "பீதி" என பெயரிட்டிருக்கின்றார்கள். இது கொஞ்சம் மந்தம் இன்று காலை உதித்தால் மறுநாள் மதியம் தான் மீண்டும் உதிக்கும்.
பூமியில் நாம் 365 நாட்களை ஒரு வருடம் என எடுக்கின்றோம் அல்லவா இதே போல செவ்வாய்க்கு 687 நாட்கள் தான் ஒரு வருடம். இங்கே கோடை, குளிர், மழை, வசந்தம் போன்ற எல்லாப் பருவகாலங்களும் 6 மாதங்கள் வீதம் மாறிமாறி வரும். சராசரி வெப்பநிலை 50 பாகை செல்சியல்.

இவ்வருடம் நாசா அனுப்பிய "ஸ்பிரிட் ரோவர்" (Spirit rover) எனும் விண்கலம் தனது கூரிய கருவிகளை கொண்டு செவ்வாயின் தரைத்தோற்றத்தை ஆராய்ந்து பல படங்களை பூமிக்கு அனுப்பியது. இந்த முயர்ச்சியின் வெற்றிக்குப் பின் நாசா மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவது பற்றி பரிசீலிக்கவுள்ளது

 
எதற்காக செவ்வாய் கிரகத்தை ஆராய்கின்றார்கள். ஏன் பூமியில் இடமில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இனி வருங்காலங்களில் பூமி எப்படியிருக்கும் என பார்ப்போம்.

மனிதனின் கைங்கரியங்களினாலும் இயற்கையின் விபரீதத்தாலும் பூமி கொஞ்சங் கொஞ்சமாக சூடாகி வருகின்றது. இன்னும் 130 கோடி ஆண்டுகளில் சூரியன் இன்றைக்கு இருப்பதை விட இன்னும் 170 மடங்கு ஊதிப் பெருக்கும் இதனால் அருகில் இருக்கும் புதன் கிரகம் அழிந்து போகும். சூரிய வெப்பம் இரண்டு மடங்காவதினால் பூமியில் மனிதன் வசிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் வேறு கிரகங்களுக்கு சென்றுதான் மனிதன் வசிக்கும் நிலமை ஏற்படும். அதற்கான முன்னேற்பாடே இது.


Friday, March 05, 2004

 

டிஸ்க்கை தூய்மைப்படுத்தும் freeware கள்

நாம் இணையத்தில் இருந்து பல software களை தரவிறக்கம் செய்து எமது கணினியில் நிறுவுகின்றோம். சில வேளைகளில் அவை எமக்கு தேவையில்லாத போது அவற்றை அழித்து விடுகின்றோம். இப்படி நாம் uninstall பண்ணும் போது சில வேளைகளில் அவை முழுவதும் அகற்றப்பட மாட்டாது. அப்படி அகற்றப்படாத பைல்கள் எல்லாம் நம் ஹார்டு டிஸ்க்கில் தேவையில்லாத குப்பைகளைப் போல் குவிந்து கிடக்கும். இதனால் கணினின் வேகம் குறைவடையலாம். இப்படி இருக்கும் குப்பைகளையும் நம் கணினியில் நமக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் வைரஸ்களையும் கண்டுபிடித்து துடைத்து நம் டிஸ்க்கை தூய்மைப்படுத்த பல freeware கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை கூறுகின்றேன். உங்களுக்கு தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

the cleaner
இது பல அன்ரி வைரஸ் ப்ரோக்கிராம்களை விட இரட்டை மடங்கு வேகத்தில் செயற்பட்டு 700க்கு மேற்பட்ட trojan horses வைரஸ்களை துப்பறிந்து ஒழிக்கின்றது. இந்த software நம் முழு கணினியையும் scan செய்கின்றது. மற்றும் டிரைவ், நாம் தேர்ந்தெடுக்கும் பைல்கள் போன்றவற்றையும் scan செய்யும். இதைப்பற்றிய மேலதிக விபரங்களை இங்கே பெற்றுக் கொள்ளுங்கள்.

systerm cleaner
இந்த சிஸ்டம் கிளீனர் 2000 ஷேர்வேரானது வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாம் நிறுவியிருந்தால் அதில் காணப்படும் பிழையை ஏற்படுத்தும் மற்றும் சேமிப்பு இடத்தை வீணாக்கும் குப்பை பைல்களை கண்டு பிடித்து அழிக்கின்றது. இது ஒழுங்காக நம் ஹார்டு டிஸ்க் டிரைவை scan செய்து பல பிழைகளை தயாரிக்கும் பைல்களை நீக்கி நம் கணினியை தூய்மைப்படுத்துகின்றது. மேலதிக விபரங்களை இங்கே பெற்றுக் கொள்ளுங்கள்.


Tuesday, March 02, 2004

 

PC ஐ பூட்டுப் போட்டு பூட்டி வையுங்கள்

இன்று இணையத்தில் தேடி firewall ஐ எனது கணினியில் நிறுவினேன். அது இயங்கத்தொடங்கியவுடன் பார்த்தால் எனக்கு நிறைய எச்சரிப்புகளை வந்தது. xxx.xxx.xxx.xxஎன்ற IPமுகவரியில் இருந்து ஒருவர் உங்கள் கணினியில் நுளைய முயர்ச்சித்தார் firewall அதை தடுத்துவிட்டது. என்று more பட்டனை அழுத்தி பார்த்தால் அந்தப் பக்கத்தில் சந்தேகத்திற்குரிய ஐ.பி. முகவரியும் அதற்குரிய கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கான வழியும் இருந்தது. அதன் மூலம் அந்த முகவரியை மோப்பம் பிடித்துப் பார்த்தால் அது OMAN இல் இருந்தது. நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன். இப்படி 10 நிமிடத்தில் USA, U.K, CHINA போன்ற 18 இடங்களில் இருந்து எனது கணினியினுள் புகமுயர்ச்சி நடந்தது.

ஊடுருவிகளின் டெக்னிக் இதுதான். போர்ட் ஸ்கேனர் எனப்படும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி ஒரு நெட்வொர்க்கை ஸ்கேன் செய்வார்கள். ஒரு பாதுகாப்பும் இல்லாத கம்ப்யூட்டர்களைக் கண்டுபிடித்து, அதில் என்ன ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது, எப்படி நுழையலாம் என்ற தகவல்களை ஸ்கேனர் அவர்களுக்குத் தரும்.

நோஞ்சான் கம்ப்யூட்டர்கள் எவை என்று கண்டுபிடித்ததும் DDoS தாக்குதலுக்கான சாஃப்ட்வேர்களை அதில் ஒளித்து வைப்பார்கள். ஊடுருவிகள் மத்தியில் Trin00, TFNபோன்ற டி.டி.ஓ.எஸ். புரோகிராம்கள் மிக `பிரபலம்'.

பிறகு அவர்கள் நினைத்த நேரத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்து தங்கள் டி.டி.ஓ.எஸ். சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் மூலம் குறிப்பிட்ட வெப்சைட்களை / கம்ப்யூட்டர்களைத் தாக்குவார்கள்.

டி.டி.ஓ.எஸ். என்றால்? ஒரு வெப்சைட் என்பது ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல் பக்கங்கள்தான். நீங்கள் ஒரு வெப்சைட்டுக்கு விஜயம் செய்யும்போது அந்த கம்ப்யூட்டரிடம் தகவல் கேட்டு உங்கள் கம்ப்யூட்டர் சில பாக்கெட்டுகளை அனுப்புகின்றன. இதுதான் இன்டர்நெட்டில் தகவல் பரிமாறப்படும் முறை.

டி.டி.ஓ.எஸ். சாஃப்ட்வேர்கள் தகவல் கேட்கும் போர்வையில் பிரம்மாண்டமான சைஸ் கொண்ட பாக்கெட்களை வெள்ளமாக அனுப்புகின்றன. இவ்வளவு தகவலைக் கையாள முடியாமல் வெப்சைட்டைக் கையாளும் வெப்சர்வர் படுத்துவிடுகிறது.

ஒரு வெப்சைட் பொதுவாக 1 நிமிடத்தில் உங்கள் பிரவுசரில் தெரிகிறது என்றால் அது தாக்குதலுக்கு ஆளாகும்போது உங்கள் பிரவுசருக்கு வந்து சேர பல நிமிடங்கள் அல்லது மணிக்கணக்கில் ஆகலாம். அதாவது தகவல் வெள்ளம் அதன் வெப்சர்வரை மிக மிக மெதுவாக செயல்பட வைக்கிறது, அல்லது செயலிழக்கச் செய்துவிடுகிறது.

உங்கள் கணினியும் பாதுகாபில்லாமல் இருக்கா உடனே firewall பூட்டுப் போட்டு பூட்டி வையுங்கள்

Wednesday, February 25, 2004

 

முகத்தை மாற்றிக் பார்க்கணுமா?

"இந்தியன்" படத்தில் "மாயா மச்சிந்...." பாடலில் கமல் அடிக்கடி உரு மாறுவதைப் பார்த்திருப்பீர்கள். அது போல நீங்களும் உங்கள் முகத்தை மாற்றிப் பார்க்க ஆசையா? மிக சுலபமான முறை ஒன்றை செல்லுகின்றேன். செய்து பாருங்கள். முதலில் http://www.effectmatrix.com/ சென்று Magic Morph ஐ download பண்ணிக் கொள்ளுங்கள். இப்போ உங்கள் முகத்தை விரும்பிய படி மாற்றிப்பாருங்கள்

Saturday, February 14, 2004

 

காதலர் தினம் (வாலன்டைன் டே)

இன்று பிப்ரவரி 14 உலகமெங்கும் இருக்கும் காதலர்களின் காதல் திருவிழா. சில நாடுகளில் மார்ச் 3 ம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டாலும் பிப்ரவரி 14 காதலர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கி.பி 496 இல் காதலர் தினம் அறிமுகமானது.


ஆங்கிலத்தில் இதை 'வாலன்டைன் டே' என அழைப்பார்கள். வாலன்டைன் என்பது ஒரு காதல் சொல் அல்ல, அது ஒரு பாதிரியாரின் பெயர். காதலர் தினம் எப்படி ஆரம்பமானது தெரியுமா?
கிளாடியஸ் என்ற மன்னன் தாம்பத்திய உறவால் ஆண்களின் பலம் போய்விடும். இதனால் ஆண்களின் வீரம், வேகம் குறைந்துவிடும் என எண்ணி திருமணத்துக்கு தடை விரித்தான். அந்த நாட்டில் யாரும் திருமணம் செய்ய முடியாது. ஆனால் வாலன்டைன் பாதிரியார் தன்னை நாடிவரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த மன்னன் பாதிரியாரை சிறையிலிடும்படி கட்டளையிட்டான். மரணதண்டனை விதிக்கப்பட்டு வாலன்டைன் பாதிரியார் சிறை சென்றார்.
சிறையில் இருக்கும் காலங்களில் பாதிரியாருக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் மலர்ந்தது. அவர் தன் காதலிக்கு எழுதிய காடிதங்களில் 'வாலன்டைன்' என கையெழுதிட்டு அனுப்பினார். பின்னாளில் காதலர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'வாலன்டைன் ' என போட்டுக்கொண்டார்கள். பின்னாளில் அதுவே காதலர்தின பெயராகியது.
நாம் நமது காதல் நாயகனாக மன்மதனை கூறுகிறோம் அல்லவா அதுபோல காதலர் தின சின்னமாக 'கியூபிட்' என அழைக்கப்படும் கையில் அம்புவில் வைத்திருக்கும் குழந்தை அழைக்கப்படுகிறது.
காதல் வந்துவிட்டால் எலலோருமே கவிஞர்கள் ஆகி விடுகின்றார்கள். உலகில் பெரிய காதல் கடிதம் எது தெரியுமா ? 1875 ம் ஆண்டு மார்ஷல் என்ற பாரசக ஓவியர் தன் காதலிக்கு எழுதிய கடிதம் தான். அந்த கடிதம் 70 நாவல்களுக்க சமன். அதில் 5625000 வார்த்தைகள் இருந்தன.
காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமான ஒருநாள்.

Wednesday, February 11, 2004

 

எனது பார்வையில் "புதுக்கோட்டையில் இருந்து சரவணன்"
இன்றைய சினிமா உலகில் மிக சிறிய வயதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த தனுஸின் 4 வது படம். இதில் தனுசுடன் ஜோடியாக புதுமுகம் அபர்ணா இணைகிறார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரட்டர்களை ஏற்கும் தனுஸ் இப்படத்தில் ஆக்க்ஷன்ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் வலுவான கதை இல்லை. M.G.R நடித்த " உலகம் சுற்றும் வாலிபன் " போல சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா, கொல்கத்தா என சுற்றி அலையும் கதை தான். தன் அண்ணன் விரும்பும் பெண்ணை கடத்திக் கொண்டு வந்து "ரிஜிஸ்ரர்மாரேஐ;" பண்ணி வைப்பதும், பின்னர் வீட்டில் அப்பா பேசுவது போல அண்ணணை பேசியவுடன் தந்தை அவர்களை மன்னித்து உடனே உள்ளே விடுவது நடைமுறைக்கு கொஞ்சம் இடிக்கிறது. தன் குடும்பத்தின் கடனை அடைக்க சிங்கப்பூர் செல்லும் சரவணன் (தனுஸ்) போன இடத்தில் சைனாக்காரன் உடன் சண்டை போடும் போது தவறுதலாக அவன் கீழே விழுந்து இறந்து போக கொலைப்பழியோடு ஒழித்து ஓடித்திரியும் சரவணனுக்கு தனது முதலாளி மகளை இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டுவந்து சேர்கும் பொறுப்பு கிடைக்கிறது. அதற்காக 3 லட்சம் பேசி ஷாலு(அபர்ணா) வுடன் இந்தியா புறப்படும் சரவணன் கையில் பாஸ்போட்டும் இல்லை, பணமும் இல்லை.
சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போட்டுடன் புறப்படும் சரவணன் மலேசியா, தாய்லாந்து, பர்மா, கொல்கத்தா என சாலை வழியாக புதுக்கோட்டை வந்து சேர்கிறார். சைனாக்காரனின் மூக்கை உடைப்பது, ஆற்றில் மூழ்கி நீச்சல் போட்டு எதிரிகளை அமுக்குவது, கண்ணாடித்துண்டுகளை கையில் ஒட்ட வைத்து எதிரிகளை பந்தாடுவது என் ஒவ்வொரு கட்டத்திலும் ஆக்ஷனில் களைகட்டுகிறார் தனுஸ். புதுமுகம் அபர்ணா செல்லமாக கொஞ்கிப்பேசினாலும் கவர்ச்சியில் து}ள்கிளப்புகிறார். விமல், கமல்என இருவேடங்களில் வரும் கருணாஸ் அஜித்தின் 'வாலி' படத்தை உல்டா பண்ணி காமடி பண்ணுவது ஓவர். கிளைமாக்ஸ் நினைத்தது மாதிரியே சப்பென்று போய்விட்டது.
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர். தனுஸ் பாடிய " நாட்டுச் சரக்கு .." பாடல் ஆட்டம் போட வைக்கும். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஸ்டேன்லி ஆக்க்ஷன், ஆடல், பாடல், என ஐனரஞ்சக் படம் தந்திருக்தாலும் நம்பமுடியாத பல காட்சிகள் படத்தில். கொஞ்ச நேரம் கவலைகளை மறந்து உலகை ஒரு சுற்றுச்சுற்றிவிட்டு வரலாம். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை படத்தில்.

 

அது ஒரு அழகிய கனாக்காலம்

" டேய் எழும்படா.........."
வரதன் போட்ட சத்ததில் எனது து}க்கம் மட்டுமல்ல எங்கள் அறையில் இருந்த அனைவரின் து}க்கமும் கலைந்து விட்டது.
லேசா கண்விழித்துப் பார்த்தேன் வரதன் வேலை முடித்து வந்து உடை மாற்றிக்கொண்டிருந்தான்.
"டேய் ஏன்டா மச்சான் கத்துற .... "
" பின்ன கத்தாம என்ன செய்ய சொல்லுற. இப்ப மணி என்ன? கெதியா எழும்பி வேலைக்கு போ, நான் படுக்கனும்......."
மெல்ல திரும்பி கடிகாரத்தை பார்த்தேன். அதிகாலை 5 மணியாகிக் கொண்டிருந்தது. 6 மணிக்கு எனக்கு வேலை.

எழுந்திருக்கவே மனமில்லை, இருந்தாலும் வேலைக்கு போயாக வேணும் இல்லையென்றால் வேலை போய்விடும். படுக்கiயை விட்டு நான் கீழே இறங்கிய அதை வேளை வரதன் ஏறிப்படுத்து விட்டான்.
எங்கள் அறையை நோட்டமிட்டேன்.

இரண்டு பேர் தங்குவற்கான அறை, ஆனால் இங்கே நாங்கள் மொத்தம் எட்டுப்பேர் தங்கியிருக்கிறோம். எங்கள் அறையில் மட்டுமல்ல இங்கே பல பேர் இப்படித்தான் வாழ்கின்றார்கள்.
தனி அறை எடுப்பதென்றால் வேலை செய்யும் காசில் பாதிக்கு மேல் அறை வாடகைக்கே போய்விடும். இப்படி பல போர் ஒன்றாக இருந்து வாடகையை பிரித்துக் கொடுப்பதால் கொஞ்சமாவது கையில் காசு மிச்சமிருக்கும்.
காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டேன்.

வெளியே பனி கொட்டிக்கொண்டிருந்தது. இது குளிர்காலம் என்பதால் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறமாக பனி மூடியிருந்தது.
ஊரில் நின்று இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். ஆனால் இங்கே இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை.
இங்கே இயந்திரத்தனமான வாழ்க்கை தான் அந்த வாழ்வோடு ஒத்து நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக வாழ்ந்தால் தான் இங்கே காலத்தை ஓட்ட முடியும்.

புகையிரதம் வருவதற்கு நான்கு நிமிடங்கள் இருப்பதாக புகையிரத நிலைய கடிகாரம் காட்டியது. விடியாத அதிகாலைப் பொழுது ஆனால் இயந்திரத்தனமாக வேலையை ஆரம்பித்து விட்ட மக்கள் கூட்டம். என்னைப் போலவே அங்கே பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.

மின்சாரத்தில் ஓடும் அந்தப் புகையிரதம் மெல்ல தண்டவாளங்களில் வழுக்கியபடி வந்து நின்றது. உள்ளே ஏறி ஒரு இருக்கயைப் பிடித்து அமர்ந்து கொண்டேன். இன்னும் அரை மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும் நான் வேலை செய்யும் இடத்தை அடைவதற்கு.
மெல்ல தலையை சாய்த்து கண்களை மூடினேன். நினைவு பல வருடங்கள் பின்னோக்கி ஓடியது.
(தொடரும்)

This page is powered by Blogger. Isn't yours?